தாமிரபரணி கரையோர சாலைகள் சேதம்: தேசிய பேரிடர் மீட்பு படை செல்வதில் தாமதம்

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (08:01 IST)
தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள சாலைகளில் தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளதால் ஸ்ரீவைகுண்டம் நோக்கி புறப்பட்ட இரு தேசிய பேரிடர் மீட்பு குழு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள சாலைகளில் சுமார் 9 கி.மீ பயணிக்க வேண்டும் எனவும் சாலைகள் கடும் சேதம் அடைந்திருப்பதல் அதில் பயணிப்பது கடும் சவாலாக உள்ளதாகவும் என்.டி.ஆர்.எஃப் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை சென்றடைய 5 என்டிஆர்எஃப் குழுக்கள் தீவிர முயற்சி செய்து வருவதாகவும் வாகனத்தில் செல்ல முடியாததால் படகு மூலம் ஸ்ரீவைகுண்டம் செல்ல முயற்சி செய்து வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

 எப்படி இருந்தாலும் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் ரயிலில் சிக்கி உள்ள பயணிகள் முழு அளவில் மீட்கப்படுவார்கள் என்றும் முதல் கட்டமாக அவர்களுக்கு உணவு தண்ணீர் கொடுத்த பின்னர் முழுமையாக மீட்கப்படுவார்கள் என்றும் தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்