இதுநாள் வரை சசிகலா தரப்பிற்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜெ.வின் அண்ணன் மகன் தீபக், நேற்று திடீரெனெ ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்துள்ளர். மேலும், அதிமுக தலைமை பொறுப்பை ஏற்கும் தகுதி தினகரனுக்கு இல்லை என அவர் அதிரடியாக பேசியுள்ளார்.
இந்நிலையில், அதிமுகவில் தனக்கு முக்கிய பதவி அளிக்கப்படும் என காத்திருந்த நிலையில், அது கிடைக்காத காரணத்தினாலேயே தீபக், தினகரனுக்கு எதிரான கருத்துகளை கூறியுள்ளார் என்ற செய்தி வெளியானது. ஆனால், அதை தீபக் மறுத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறிய போது “எனக்கு அரசியலில் ஆர்வம் கிடையாது. எனது சகோதரி தீபா கூட அரசியலில் ஈடுபடுவதில் எனக்கு உடன்பாடில்லை என கூறும் நான், அரசியலில் பதவி வாங்கி என்ன செய்யப் போகிறேன். என்னைப் பொறுத்தவரை அதிமுக உடையக் கூடாது. ஓ.பி.எஸ், சசிகலா தரப்பு என அனைவரும் ஒன்றாக இணைந்து கட்சியை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை” என அவர் கூறினார்.