ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கினார். இதில் நிர்வாகிகளை நியமிப்பதில் கணவர் மாதவனுக்கும், தீபாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இந்நிலையில் தீபாவின் பேரவைக்கு மாற்றாக தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அவரது கணவர் மாதவன் அறிவித்து அதிர்ச்சியளித்தார். இருப்பினும் கட்சியும், பேரவையும் இணைந்து செயல்படும். தீபாவும், நானும் ஒரே வீட்டில் வசிப்போம் என்றார். ஆனால் தற்போது மாதவன் தீபாவிடம் சண்டை போட்டுவிட்டு பணப்பெட்டியுடன் வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.
தீபாவின் பேரவை நிர்வாகிகள் நியமனத்திற்காக, வசூலித்த பணம் தொடர்பாக, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இதனால், பெட்டி ஒன்றுடன் மாதவன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் எனவும் கூறப்படுகிறது. அதில், நிர்வாகிகளிடம் வசூலித்த பணம் மற்றும் ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
தீபாவின் பேரவையில் இப்படி பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதால், அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்த பலரும் தற்போது ஓபிஎஸ் அணிக்கு சென்றுவிட்டனர். பல முன்னாள் எம்எல்ஏக்களும் தீபாவிடம் இருந்து விலகி ஓபிஎஸ்ஸிடம் சென்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன.