சிலை கடத்தில் மன்னன் தீனதயாளன் கைது

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2016 (19:53 IST)
சிலை கடத்தில் மன்னன் தீனதயாளனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையில் உள்ள சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனின் வீட்டில் கடந்த மே 31ஆம் தேதி முதல் 3 நாள்களும், அவரது மற்றொரு வீடு, கிடங்கு ஆகியவற்றில் கடந்த 11ஆம் தேதி முதல் இரு நாள்களும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை செய்து, 49 ஐம்பொன் சிலைகள் உள்பட மொத்தம் 285 சிலைகளும், சுமார் 96 ஓவியங்களும் கைப்பற்றப்பட்டன. 
 
தொழிலதிபர் தீனதயாளன், கடந்த 4ஆம் தேதி போலீஸாரிடம் சரணடைந்தார். அவரிடம் 18 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார். 
 
இதனையடுத்து சென்னை எழும்பூர் 2 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
அடுத்த கட்டுரையில்