கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு தூக்கு!!

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (15:34 IST)
கோவையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி சந்தோஷ்குமாரின் தண்டனை விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 
 
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்த 1 ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். அதன்பின்னர் பலமணி தேடியபின்னர் மறுநாள் காலையில் வீட்டின் எதிர்புறம் உள்ள சந்தில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
அந்த சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொன்று உடலை வீசிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் இந்த கொடூரத்தை செய்து இருக்கலாம் என்று போலீசார் முதலில் சந்தேக்கித்தனர்.
 
பின்னர் அவரிடம் நடந்த விசாரணையில் அவர் சில தகவல்களை முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. இதனையடுத்து போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சந்தோஷ்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 
 
உடனே போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் சந்தோஷ்குமார் குற்றவாளி என இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  அதோடு குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது கோவை சிறப்பு நீதிமன்றம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்