2024-25 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் மற்றும் தகுதி படிப்பு உதவி தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல், கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜனவரி 29 வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2024-25 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் மற்றும் தகுதி படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால் மற்றும் கட்டண தொகை செலுத்துவதற்கு கடைசி நாள் ஜனவரி 25 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
தற்போது மாணவர்களின் நலன் கருதி தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி 29 மாலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விவரத்தினை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மேற்குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் கால அவகாசம் நீடிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது