டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2, 8 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது என்பதையும், இந்த தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில், இந்த தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய டிசம்பர் 18ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு பிப்ரவரி 2, 8 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி மற்றும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. புதிய தேதியாக பிப்ரவரி 8ஆம் தேதி காலை 9:30 முதல் 12:30 வரை குரூப் 2 தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கான முதல் தாளான தமிழ் மொழி தேர்வு பிப்ரவரி 8 பிற்பகல் 2:30 முதல் 5:30 வரை நடைபெறும் என்றும், முதன்மை தேர்வுக்கான இரண்டாம் தாள் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 37 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.