தமிழக சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் காலமானார். இவருக்கு வயது 71 ஆகும்.
பி.ஹெச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக பதவி வகித்தவர். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிந்தியா பாண்டியன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் முக்கிய தலைவராக பி.ஹெச்.பாண்டியன் உள்ள நிலையில் அவரது மனைவியின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.