புயல் காரணமாக கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 முக்கிய துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புயலின் நகர்வு மற்றும் அதன் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பொது மக்கள் வானிலை நிலவரங்களை தொடர்ந்து கவனிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.