தற்போது இந்த புயல் ஆந்திரப்பிரதேசம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்தபோதிலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் நேற்று மெரினா கடற்கரையை கடல் நீரும், மழை நீரும் ஒன்று சேர சூழ்ந்தது. புயல் நீரால் மெரினா கடற்கரை மூழ்கியுள்ளதை கண்டு மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். ஆனால் இப்போது நீர் வற்றியுள்ளதால் கடற்கரை கொஞ்சம் தெரிந்துள்ளது.