மீண்டும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம்

Mahendran

வியாழன், 17 அக்டோபர் 2024 (13:56 IST)
வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என்பதும், இன்று அதிகாலை புதுவை மற்றும் ஆந்திரா கடற்கரை இடையே கரையை கடந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில், சென்னைக்கு பெரும் கனமழை மற்றும் வெள்ள அபாயம் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறியதால் சென்னை தப்பித்தது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தற்போது வந்துள்ள தகவலின் படி, வங்கக் கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 20ஆம் தேதி வளிமண்டல சுழற்சி உருவாக இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த வளிமண்டல சுழற்சி 22ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசை நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்