ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி ஆகிவிட்டது: சிவி சண்முகம்

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (14:27 IST)
அதிமுகவில் உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரண்டு பதவிகளும் காலாவதி ஆகிவிட்டது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியைப் பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சி செய்து கொண்டு வருவதாகவும் ஆனால் அந்த முயற்சியை தடுக்க ஓபிஎஸ் சட்ட நடவடிக்கைகளில் இறங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்தநிலையில் அதிமுகவில் உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரண்டு பதவிகளும் காலாவதி ஆகி விட்டதாகவும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அவைத் தலைவருக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது என்றும் செய்தி சண்முகம் தெரிவித்துள்ளார். அவருடைய என்ற கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்