அதிமுக பிரச்சனைகளுக்கு ராகுல் காந்தி தான் காரணமா?

வெள்ளி, 24 ஜூன் 2022 (09:26 IST)
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனை தலைவிரித்தாடி வரும் நிலையில் இதற்கு பாஜக தான் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு ராகுல் காந்தி தான் காரணம் என புதுவிதமாக ஒரு வதந்தி பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தொலைபேசி மூலம் எடப்பாடி பழனிச்சாமியிடம் ராகுல்காந்தி பேசியதாகவும் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த தகவல் பாஜக தலைமைக்கு தெரிய வந்தவுடன் தான் ஓபிஎஸ் மூலம் அதிமுக-வில் பிரச்சனை ஏற்பட்டு வருவதாகவும் இதனால் இந்த பிரச்சினையின் மூல காரணம் ராகுல் காந்தி எடப்பாடிபழனிசாமி இடம் பேசியதுதான் என்றும் கூறப்படுகிறது 
ஆனால் இதில் சிறிதும் உண்மை இல்லை என அதிமுக வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்