சிறைகளில் செய்திச் சேனல்களுக்கு கெட்அவுட்! பொழுது போக்கு சேனல்களுக்கு கட்அவுட் !

Webdunia
சனி, 16 மார்ச் 2019 (16:53 IST)
சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் செய்திச் சேனல்களை ஒளிபரப்பக் கூடாது என  தமிழக சிறைத்துறை டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  
ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலும் சட்டமன்ற இடைத்தேர்தலும் ஒன்றாக நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளன. தற்போது அனைத்துக் கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளரை அறிவிப்பதில் பிஸியாக உள்ளன. இதனால் நொடிக்கு நொடி செய்தி சேனல்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. 
 
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை உள்பட பரபரப்பான பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில் செய்தி சேனல்களை ஒளிபரப்ப தடை விதித்து சிறைத்துறை ஏடிஜிபி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
அனைத்து சிறைத்துறை கண்காணிப்பாளர்களுக்கு தமிழக சிறைத்துறை டிஜிபி  அனுப்பி உள்ள  சுற்றறிக்கையில்,தமிழ் திரைப்படங்கள், இதர பொழுதுபோக்கு தமிழ் சேனல்களை சிறைகளில் ஒளிபரப்பலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் செய்திச் சேனல்களை ஒளிபரப்பக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைகளில் திடீரென செய்தி சேனல்களை ஒளிபரப்ப தடை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஏன் செய்தி சேனல்களுக்கு சிறைகளில் தடை விதிக்கப்பட்டது என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்