தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் பழனிசாமி உத்தரவு

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (16:23 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி வரை சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவருகின்றன. தமிழகத்தில் பிரதமரின் உத்தரவைக் கேட்டுச் செயல்படுத்தப்படும் என தலைமைச்செயலர் சண்முகம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு எனவும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி அறித்துள்ளதாவது :

தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாத பொருட்கள் இலவசமாக வழங்லப்படும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும்,  ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு முக்கியம். கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள தொலை மருத்துவ முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது .

அதனால், விழித்திருங்கள் - விலகியிருங்கள் -வீட்டிலிருங்கள் என்ற கோட்பாட்டை பின்பற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

 
தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், (சர்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை தலா 1 கி.கி, எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி) நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும். #LockdownExtended #TNGovt

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்