ஊரடங்கு குறித்து ஆலோசனை: மாலை வெளியாகும் அறிவிப்புகள்?

சனி, 21 ஆகஸ்ட் 2021 (11:23 IST)
ஊரடங்கு குறித்து ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள்  மு.க. ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா? கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுகிறதா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.
 
கொரோனா தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் வரத்தொடங்கியது. இதனால் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்புநிலை ஓரளவு திரும்பியுள்ளது. ஆனாலும் பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் திறக்கப்படவில்லை.
 
இந்நிலையில் தற்போது ஊரடங்கு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
எனவே வருகிற 1 ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுமா என்பது இன்று மாலை தெரிய வரும். மேலும் ஊரடங்கு தளர்வில் தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் திறக்கப்படுமா என்பது பற்றியும் அறிவிப்பில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்