அறிக்கை வேணும்னா விடலாம்.. முடிவெடுக்க முடியாது! – அதிமுகவுக்கு குட்டு வைத்த பாஜக!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (11:54 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து குறிப்பிட்டுள்ளது பற்றி பாஜக சி.டி.ரவி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக சமீபத்தில் வெளியிட்டது. முன்னதாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், அதிமுகவும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி “குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. குடியுரிமை சட்ட விவகாரத்தில் அதிமுக முடிவெடுக்க முடியாது. அதிமுக தேர்தல் அறிவிப்பை திரும்ப பெற சொல்லி அவர்களிடம் பேசுவோம்” என கூறியுள்ளார். தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் இருவேறு தரப்பில் பேசுவதால் சர்ச்சை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்