கருணாநிதி பிறந்த இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரியாதை!

J.Durai
வியாழன், 17 அக்டோபர் 2024 (18:30 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த திருக்குவளை இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
ஆய்வுப்பணிக்காக நாகை வந்த  அமைச்சர்  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த திருக்குவளை இல்லத்திற்கு வருகை தந்தார்.
 
அவருக்கு திமுக கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சோ.பா. மலர்வண்ணன் தலைமையில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
தொடர்ந்து  கருணாநிதியின்  தாய் தந்தையான அஞ்சுகம் முத்துவேலர், கலைஞர் மற்றும் முரசொலி மாறன் ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
பின்னர் அங்குள்ள வருகை பதிவேட்டில் தனது வருகையை பதிவு செய்தார்.
 
அப்போது  ஆட்சியர் ஆகாஷ் மற்றும்
திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்