துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

சனி, 23 ஜனவரி 2021 (17:19 IST)
சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசிய அதன் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி நீதிபதிகள் தொடர்பாக சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த  துக்ளக் பொன்விழாவில் பேசிய தனது கருத்து பெரும் சர்ச்சையானதை அடுத்து அந்த கருத்துக்கு குருமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிகள் நியமனம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்தன. அதனை அடுத்து அவர் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் குருமூர்த்தி தன் பேச்சுக்கு விளக்கம் அளிக்கவேண்டும் என்று நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்