துக்ளக் விழாவில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி!

ஞாயிறு, 17 ஜனவரி 2021 (11:25 IST)
சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசிய தனது கருத்து பெரும் சர்ச்சையானதை அடுத்து அந்த கருத்துக்கு குருமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் ஆசிரியர் குருமூர்த்தி ஆவேசமாக சில கருத்துக்களை பேசினார். குறிப்பாக சசிகலா குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு டிடிவி தினகரன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இதே விழாவில் அவர் நீதிபதிகள் நியமனம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்ததை அடுத்து அவர் இன்று அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் 
 
உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்காக அரசியல்வாதிகள் தேடுகிறார்கள் என துக்ளக் விழாவில் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக குருமூர்த்தி தெரிவித்துள்ளார். நீதிபதி பதவிக்கு விண்ணப்பம் செய்தவர்கள் என்று கூறுவதற்கு பதிலாக நீதிபதிகள் என்று தவறாக குறிப்பிட்டுவிட்டதாகவும் குருமூர்த்தி விளக்கமளித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்