’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?

சனி, 16 ஜனவரி 2021 (21:27 IST)
’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் படங்களில் ஒன்றான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற படத்தின் புதிய போஸ்டர் இன்று காலை வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு படமான துக்ளக் தர்பார் படத்தின் அட்டகாசமான போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது விஜய் சேதுபதியின் பிறந்தநாளையொட்டி பொங்கல் ஸ்பெஷலாக அவரது ரசிகர்களுக்கு இந்த போஸ்டர் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
விஜய்சேதுபதி, ராஷிகண்ணா, அதிதிராவ் ஹைத்ரி, பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ’96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

#TughlaqDurbar

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்