ரேபிடோ செயலி வாயிலாக அறிமுகம் செய்யப்பட்ட ‘பைக் ஷேரிங்’ சேவை சென்னையில் கடந்த சில மாதங்களாகப் பிரபலமானது. இந்திய மோட்டார் வாகனச்சட்டப்படி பைக்குகளை வாடகைக்கு இயக்கக்கூடாது. ஆனால் அதையும் மீறி சென்னையில் சட்டவிரோதமாக பைக் டாக்ஸி இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததை. அடுத்து இச்சேவையைப் பயன்படுத்த வேண்டாம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியது. சென்னை உயர்நீதிமன்றம் பைக் டாக்ஸி சேவைக்கு தடைவிதித்து வழக்கை இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைப்பதாக அறிவித்தது.
இந்த செயலியை பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் போன்ற தளங்களிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்த தடையை எதிர்த்து ரோப்பென் டிரான்ஸ்போர்டேசன் சர்வைசஸ் பிரைவேட் லிமிடெட் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு இது தொடர்பான முறையான சட்டங்களை வகுக்கும்வரை பைக் டாக்ஸி சேவைக்கு விதித்த தடையை ரத்து செய்வதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.