ராகுல் காந்தி பொய் பேசுவதாக கூறி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை குறிப்பிட்டு, "ராகுல் காந்தியை போல பொய் பேச வேண்டாம்" என தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் 'ஆபரேஷன் மகாதேவ்' போன்ற நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்குப் பிறகு, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பேட்டியில், பிரதமர் மோடியின் அறிவுரைகள் குறித்து பேசினார். ராகுல் காந்தி எப்போதும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். உச்ச நீதிமன்றமே அவரை கண்டித்திருக்கிறது. இது நமக்கு ஒரு பாடம். ராகுல் காந்தியை போல நாம் ஒருபோதும் பொய் பேசக் கூடாது என்று பிரதமர் மோடி எங்களுக்கு அறிவுரை வழங்கினார்" என்று கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி மூன்று வாரங்கள் ஆகியும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் ஒரு மசோதாவையும் நிறைவேற்ற முடியவில்லை என்றும் அவர் கூறினார். கிரண் ரிஜிஜுவின் இந்த பேட்டி, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.