ஜல்லிக்கட்டில் வென்றவருக்கு கார் பரிசு வழங்க தடை!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (17:54 IST)
சமீபத்தில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது என்பதும் இந்த ஜல்லிக்கட்டில் வென்ற  கண்ணன் என்பவருக்கு முதல் பரிசாக கார் பரிசு என அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் கண்ணன் இந்த ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற கண்ணன் என்பவருக்கு கார் பரிசு வழங்க உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அதிகமாக மாடுகள் பிடித்த தனக்கு பரிசு வழங்காமல் ஆள்மாறாட்டம் செய்த கண்ணனுக்கு முதல் பரிசு வழங்கியதாக கருப்பண்ணன் என்பவர் சமீபத்தில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கின் விசாரணையில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற கண்ணன் என்பவருக்கு கார் பரிசு வழங்க ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ள உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்