டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு

புதன், 27 ஜனவரி 2021 (19:40 IST)
சீனா நாட்டைச் சேர்ந்த டிக்டாக் செயலி உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை நிரந்தரமாகத்தடை விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தியா – சீனவுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலைஅடுத்து, இந்தியா சீனா நாட்டில் ஹலோ, டிக்டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.

அதாவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் பொதுஒழுங்குக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் சீனா நாட்டின் ஆப்களை தடைவிதிப்பதாக மத்திய அரசு கூறியிருந்த நிலையில், இவை மீண்டும் இந்தியாவுகுள் நுழையவுள்ளதாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த 50 செயலிகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்