டாஸ்மாக் அமைக்கும் போது உள்ளூர் மக்களின் எதிர்ப்பை கணக்கில் கொள்ளவேண்டும்… நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (17:33 IST)
டாஸ்மாக் அமைக்கும் அந்தந்த பகுதி மக்களின் எதிர்ப்புகளைக் கணக்கில் கொள்ளவேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என பாண்டி என்பவர் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏனென்றால் டாஸ்மாக் கடை இருக்கும் பகுதியில் தொடக்கப் பள்ளி, கோயில் போன்றவை இருந்ததே காரணம் என சொல்லப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாஸ்மாக் கடையை மூட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மேலும் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படும் இடங்களில் தூர நிர்ணய விதிகளை சரியாகக் கடைபிடிக்கப் படவேண்டும் எனவும் உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளைக் கணக்கில் கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்