சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஆர்யா சாயிஷா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் டெடி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. விரைவில் ஓடிடி தளத்தில் அல்லது திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா மீண்டும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையோடு தொடங்கியுள்ளது. இந்த படத்தில் ஆர்யா, சிம்ரன் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.