பெரியார் பல்கலைக்கழகத்திலும் முறைகேடுகள்? -தொடரும் அதிர்ச்சிகள்

செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (10:04 IST)
பாரதியார் பலகலைக்கழகத்தில் முறைகேடாக பணி நியமணம் செய்து, பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக துணைவேந்தர் கணபதி சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 
அவருக்கு உடைந்தாக இருந்த  வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார்.. மேலும், பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர பொறுப்பு இயக்குநர் மதிவாணன் மீது, சந்தேகத்தின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 80 பேரை பணி நியமனம் செய்ததில் சுமார் ரூ.80 கோடி வரை லஞ்சம் பணம் கை மாறியதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், பெரியார் பல்கலைகழகத்திலும் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
2000ம் ஆண்டில் இருந்தே பெரியார் பல்கலைக்கழகம் லஞ்ச ஒழிப்பு துறையினரின் வழக்குகள், போலி சான்றிதழ், ஊழல் என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. ஆனால், உறுதியான நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
 
ஏற்கனவே பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் மணிவண்ணன் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பல்கலைக்கழக முன்னாள் நிர்வாகிகள் மீது உழல் புகார்களை அளித்துள்ளார். பல்வேறு முறைகேடுகளால் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ரூ.8 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
தற்போது முதல்வரின் மாவட்டமாக சேலம் இருப்பதால் அங்கு அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில், லஞ்ச ஒழுப்பு துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். எனவே, பழைய புகார்கள் தூசி தட்டி விசாரணைக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிகிறது. அதோடு, இதற்கு ஆளுநர் தரப்பும் அனுமதி அளித்துவிட்டதால், விசாரணை விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த விவகாரம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடாக ஊழல் செய்தவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்