ரூ.84 கோடி முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு: சிறைக்கு செல்வாரா முன்னாள் முதல்வர்?

சனி, 23 டிசம்பர் 2017 (07:09 IST)
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி ஆகியோர் கால்நடைத் தீவனம் வாங்கியதில், அரசு கருவூலத்தில் இருந்து 84 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிந்து இன்று காலை தீர்ப்பு வெளியாகவுள்ளது.

இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதால் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் லாலு மற்றும் அவரது மகன் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே தமது மகன் தேஜஸ்வியுடன் லாலுபிரசாத் யாதவ் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார்

தீர்ப்பு பாதகமாக இருந்தால் இன்றே இருவரும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஞ்சியில் செய்தியாளர்களை சந்தித்த லாலுபிரசாத், 2 ஜி வழக்கு, ஆதர்ஷ் வழக்கு ஆகியவற்றில் நியாயமான தீர்ப்புகள் கிடைத்திருப்பதைப் போல, இந்த வழக்கிலும் நீதி வெல்லும் வகையில் தீர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்