சமூகவலைதளங்களில் வெளியான ஒரு புகைப்படம் இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
திருப்பூர் 50வது வார்டு ஈஸ்வரமூர்த்தி லே அவுட் பகுதியில் மாநகராட்சி சார்பில் தண்ணீர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் டேங்க் என்றவுடன் கான்கிரீட் தொட்டி என நினைத்து விடாதீர்கள். பிளாஸ்டிக்கில் வைக்கப்பட்ட 1000 லிட்டர் டேங்க்தான். இந்நிலையில் இதை அமைக்க 7.7 லட்சம் செலவானதாக எழுதியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இதுகுறித்து சமூகவலைதளங்களில் கேலிகளும் மீம்ஸ்களும் உருவாக இப்போது நகராட்சி நிர்வாகம் அதற்கு பதிலளித்துள்ளது.
அதன் படி ஆன மொத்த செலவை கணக்குக் காட்டும் விதமாக கையால் எழுதப்பட்ட ரசீது ஒன்றை வெளியிட்டுள்ளது.