கொரோனா வலுவிழந்துவிட்டது, மருந்து இல்லாமலேயே காணாமல் போகும்: பிரபல விஞ்ஞானி

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (20:51 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 90 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஓரிரு நாளில் ஒரு கோடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் காரணமாக ஆற்றல் குறைந்து விட்டதாகவும் தீவிர நிலையில் இருந்து அடுத்த நிலைக்குச் சென்று விட்டதாகவும் இதனால் மருந்து கண்டுபிடிக்கும் முன்னரே கொரோனா வைரஸ் இந்த உலகத்தை விட்டு மறைந்து விடும் என்றும் ஜெனோவா நகரிலுள்ள நோய் பிரிவு தலைவர் மேட்டியோ என்பவர் கூறியுள்ளார்
 
மேலும் கொரோனா வைரஸ் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ற வகையில் செயல்பட தொடங்கி இருப்பதாகவும் லாக்டவுன் மற்றும் சோசியல் டிஸ்டன்ஸ் காரணமாக கொரோனா பரவுவது வெகுவாக குறைந்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் 
 
எனவே ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்னரே கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இவருடைய கருத்தை இங்கிலாந்தின் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காணாமல் போகும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தடுப்பூசி இருந்தால் மட்டுமே அந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும் கொரோனா வைரஸ் நீண்ட காலம் இருக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்