600 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்...

Webdunia
புதன், 20 மே 2020 (22:23 IST)
கடவூர் அருகே மீண்டும் 600 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கிய அமெரிக்காவில் உள்ள மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை மற்றும் …பசுமைக்குடி மூலம் வழங்கப்பட்டது.

இந்திய அளவில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பு ஏற்படுத்திய நிலையில், நாடெங்கிலும், இந்த வைரஸ் நோயினை கட்டுப்படுத்த பல்வேறு விதமான ஊரடங்குகளையும், 144 ஊரடங்கு உத்தரவினையும் அமல்படுத்தப்பட்டது.

முதல் கட்டம், இரண்டாவது கட்டம், மூன்றாவது கட்டம் என்று பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு சுமார் 57 நாட்களை தாண்டிய நிலையில்., தமிழகத்தில், குறிப்பாக கரூர் மாவட்டத்தில்,  கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வரவனை ஊராட்சியில், வ.வேப்பங்குடி பகுதியில் உள்ள பசுமைக்குடி தன்னார்வல அமைப்பு சார்பில், ஏற்கனவே, 550 குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி, பருப்புகள் மற்றும் மளிகை சாமான்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், மூன்றாவது கட்டமாக இன்று வரவனை ஊராட்சியில், அமெரிக்காவில் உள்ள மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை மூலமும், பசுமைக்குடி தன்னார்வல அமைப்பு மூலமாகவும் 600 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி வழங்கப்பட்டது.

வரவணை ஊராட்சிக்குட்பட்ட வீரமலைப்பாளையம், ஒடுகம்பட்டி, பாலப்பட்டி, கொளத்தூர், கருணாபுரம், சுள்ளாமணிப்பட்டி, செருப்புளிப்பட்டி., மேல சக்கரகோட்டை ஆகிய ஊர்களில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளையின் நிர்வாகி வேலாயுதம், எரிமலை ரத்தினம், ராஜேஷ் கே.பாலாஜி, வி.பாஸ்கர், மருத்துவர் நந்தகுமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். 

இந்நிகழ்ச்சிக்கு வரவணை ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். கடவூர் வட்டாட்சியர் மைதிலி, வருவாய் ஆய்வாளர் பாலச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், பசுமைக்குடி தன்னார்வலர்கள் பி.முருகேஷன், பி.கருணாநிதி, ர.வேல்முருகன், த.காளிமுத்து, கா.கவினேசன், ல.கார்த்திகேயன் ஆகியோரால் வழங்கப்பட்டது. பசுமைக்குடி இளைஞர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளைகள், மேலும், இந்த பொருட்கள் வாங்க உதவிய காவல்துறையை சார்ந்த சுந்தரி, கஜேந்திரன் ஆகியோருக்கும் வரவனை பகுதியினை சார்ந்த அனைத்து ஊர் பொதுமக்கள் நன்றியினை தெரிவித்து உள்ளனர். இதற்கான முழு ஏற்பாடுகளை பசுமைக்குடி தன்னார்வலர் அமைப்பின் நிர்வாகியும், அமெரிக்காவினை சார்ந்த நரேந்திரன் கந்தசாமி சிறப்பாக செய்திருந்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்