ஜம்ப் அடித்த ஜம்புலிங்கம்; கொரோனா நோயாளி தப்பியோட்டம்– கடலூரில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (11:16 IST)
கடலூரில் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ல நிலையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா காரணமாக கொண்டூர் பகுதியை சேர்ந்த 35 வயதான ஜம்புலிங்கம் என்பவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு யாரும் கவனிக்காத நேரமாக பார்த்து தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீஸில் புகார் அளித்துள்ள நிலையில் தப்பியோடிய ஜம்புலிங்கத்தை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்