உச்சம் தொட்ட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை – தமிழக மக்களுக்கு ஆறுதல் செய்தி!

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (19:21 IST)
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மட்டும் 5000 பேர் கொரோனா சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தினசரி 4000 பேருக்கு மேல் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்த செய்தி தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளித்தாலும் தொடர்ந்து சிகிச்சையில் தேறி வீட்டுக்கு அனுப்பப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பது ஆறுதலாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மட்டும் தமிழகத்தில் 5000 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்தமாக குணமானவர்களின் எண்ணிக்கை 1,02,310 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,167  ஆகவும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்