எம்ஜிஆர் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 18 மே 2020 (12:41 IST)
எம்ஜிஆர் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா
சென்னையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் கோயம்பேடு மார்க்கெட்டை அடுத்து பிசியாக உள்ள மார்க்கெட்டுகளில் ஒன்று எம்ஜிஆர் நகர் காய்கறி மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் தினமும் ஆயிரக்கணக்கானோர் காய்கறி வாங்கவும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் காய்கறிகள் விற்பனை செய்யவும் வருவதுண்டு.
 
இந்த நிலையில் சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காததால் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகமானது. இதனை அடுத்து கோயம்பேடு மார்க்கெட் அதிரடியாக மூடப்பட்டது
 
இந்த நிலையில் எம்ஜிஆர் நகர் மார்க்கெட் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அந்த மார்க்கெட்டில் கடை போட்டிருக்கும் 147 வியாபார்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது. எம்ஜிஆர் நகர் காய்கறி மார்க்கெட்டுக்கு 3 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கோயம்பேடு மார்க்கெட் போலவே எம்ஜிஆர் நகர் மார்க்கெட் வியாபாரிகள் அதிகமானோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டும் மூடப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்