குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்து! – பலி எண்ணிக்கை உயர்வு!

Webdunia
ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (11:01 IST)
குன்னூரில் சுற்றுலா பேருந்து விபத்துக்கு உள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.



தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் மக்கள் பலரும் சுற்றுலாவிற்கு திட்டமிட்டு வரும் நிலையில் தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு 61 பேர் கொண்ட சுற்றுலா குழுவினர் பேருந்தில் வந்துள்ளனர். அங்குள்ள சுற்றுலா பகுதிகளை ரசித்துவிட்டு அவர்கள் கோவை திரும்பிக் கொண்டிருந்தனர்.

மாலை 5.30 மணியளவில் குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் சென்றுக் கொண்டிருந்த அந்த சுற்றுலா பேருந்து 9வது கொண்டை ஊசி வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் பாய்ந்தது. பேருந்துக்குள் சிக்கிய பயணிகள் எழுப்பிய அலறலை கேட்டு அங்கு குவிந்த மக்கள் உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு விரைந்த காவலர்கள், தீயணைப்பு துறையினர் பேருந்தில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நேற்றே சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். 40க்கும் அதிகமானவர்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்