அண்ணாமலை வேண்டும்.. அதிமுக கூட்டணி வேண்டாம்! - அண்ணாமலை ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு!

Prasanth Karthick

புதன், 2 ஏப்ரல் 2025 (12:38 IST)

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட உள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக - அதிமுக கூட்டணிக்காக இரு கட்சிகள் இடையேயும் பேச்சுவார்த்தை நடத்து வருவதாக கூறப்படுகிறது. பாஜக தமிழக தலைவரான அண்ணாமலையுடன் அதிமுகவினருக்கு ஏற்கனவே முரண்பாடு இருப்பதால் அவரை நீக்கி விட்டு புதிய தலைவரை நியமிக்க பாஜக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் ராமநாதபுரம் பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று வைரலாகியுள்ளது. அதில் “மாநில பாஜக தலைவராக அண்ணாமலை வேண்டும். அதிமுக கூட்டணி வேண்டாம்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

 

இதனால் பாஜக மேலிடம் அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து நீக்கினால் அது பாஜகவை சேர்ந்த அவரது ஆதரவாளர்களின் எதிர்ப்பை சம்பாதிக்கும் என தெரிகிறது. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்