மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 440 ரூபாய் உயர்வு..!

Siva

வியாழன், 13 மார்ச் 2025 (09:55 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்துள்ளதாக வெளி வந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அதுமட்டுமின்றி ஒரு சவரன் தங்கம் விலை கிட்டத்தட்ட 65 ஆயிரம் என்ற விலையால் இனி ஏழை எளியவர்களுக்கு எட்டாக்கனியாகி விடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ரூபாய்   8,120 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 440 உயர்ந்து  ரூபாய்  64,960 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,858 எனவும் ஒரு சவரன் ரூபாய் 70,864 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 110.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  110,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்