டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு..!

Siva

திங்கள், 17 பிப்ரவரி 2025 (07:52 IST)
டெல்லியில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், இன்னும் சில மணி நேரங்களில் பாஜக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்ய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

டெல்லியில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்தது என்பதும், பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். மொத்தமாக 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் இன்று கூடி முதலமைச்சர் தேர்வு செய்ய உள்ளனர்.

மேலும், அமைச்சர்கள் பதவிக்கான நபர்களும் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா மற்றும் பாஜகவின் மூத்த தலைவர் விஜேந்தர் குப்தா ஆகிய இருவரும் தற்போது முதல்வர் பதவி போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மேலும் சிலர் முதலமைச்சர் பதவிக்கு முயற்சித்து வரும் நிலையில், இன்று காலை 10 மணி முதல் 11 மணிக்குள் முதலமைச்சர் யார் என்பதை நான் அதிகாரபூர்வமாக பாஜக தலைமை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து பதவி ஏற்பு விழா இன்னும் ஒரு நாளில் நடைபெறும் என்றும், அதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானம் அல்லது யமுனை நதியோரத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editd by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்