சாவர்க்கர் குறித்து பொறுப்பற்ற பேச்சு: ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

Mahendran

வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (13:42 IST)
சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், சாவர்க்கர் உள்பட சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்து பொறுப்பேற்ற முறையில் பேசக்கூடாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதி ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவரான சாவர்க்கரை விமர்சனம் செய்து பேசியதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது தொடர்பட்ட வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி தீபங்கர் தத்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு பின்னர், "உங்கள் உண்மையுள்ள சேவகன்" என மகாத்மா காந்தியும் ஆங்கிலேயர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது ராகுல் காந்திக்கு தெரியுமா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
 
மேலும், சாவர்க்கருக்கு இந்திரா காந்தி கூட கடிதம் எழுதியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்யக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். நீதிபதியின் இந்த விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்