கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்: குற்றம் நடந்தபின் சரக்கடித்துவிட்டு சாப்பிட்டு பதட்டமின்றி சென்ற மிஸ்ரா..!

Siva

ஞாயிறு, 6 ஜூலை 2025 (11:19 IST)
கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில், முக்கியக் குற்றவாளியான மோனோஜித் மிஸ்ரா, குற்றத்தை செய்த பிறகு, கல்லூரி வளாக பாதுகாப்பு அறையிலேயே மது அருந்தியதாக போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
 
போலீஸ் தகவல்படி, மிஸ்ரா, பிரமித் முகர்ஜி மற்றும் ஜாயிப் அகமது ஆகிய மூவரும் குற்றத்தை செய்த பிறகு, பாதுகாப்பு அறையில் மது அருந்தியுள்ளனர். அதன் பிறகு, பாதுகாப்புப் பணியாளர் பினாகி பானர்ஜியிடம் இந்த சம்பவம் குறித்து வாய் திறக்க கூடாது என்று மிரட்டியுள்ளனர். பின்னர், மூன்று பேரும்  ஒரு உணவகத்திற்கு சென்று இரவு உணவு அருந்திவிட்டு, அதன்பின் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
 
மேலும் ஜூன் 25 ஆம் தேதிக்கு முந்தைய நாட்களில் மூன்று பேருக்கும் இடையே அடிக்கடி தொலைபேசி தொடர்புகள் இருந்ததை அழைப்பு பதிவுகள் காட்டுவதாகவும், இது சம்பவம் முன் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது,
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்