கார்கே கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஆளே இல்லை.. கடுப்பில் பதவி பறிப்பு..!

Mahendran

செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (11:41 IST)
பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே கலந்து கொண்ட கூட்டத்தில் ஆளே இல்லை என்ற நிலையில் அந்த பகுதியின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் அங்கு தற்போது காங்கிரஸ் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பீகாரில் காங்கிரஸ் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்த நிலையில் அதில் கார்கே பங்கேற்றார்.
 
ஆனால் இந்த கூட்டத்திற்கு சுத்தமாக ஆளே வரவில்லை. கிட்டத்தட்ட அனைத்து சேர்களும் காலியாக இருந்தது. இதனால் கடுப்பான கார்கே அந்த பகுதியில் மாவட்ட செயலாளரை அழைத்து திட்டியதாகவும், அவரது பதவியும் பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுவது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
பீகாரில் காங்கிரஸ் நிலை பரிதாபமாக உள்ளது என்றும், இதற்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி, கார்கே ஆகியோர்கள் தான் காரணம் என்றும் மாவட்ட செயலாளர் பதவியைப் பறித்து என்ன நடக்கப்போகிறது என்று காங்கிரஸ் கொண்டார்கள் கார்கே முன்னிலையில் வாக்குவாதம் செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பீகார் மாநில தேர்தலில் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் செய்யும் என்று கார்கே தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்