தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று பாஜக கூறி வரும் நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்ற வகையில் அதிமுக அமைப்பு செயலாளர் அன்வர் ராஜா பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாஜகவினர் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று கூறி வருவதும், அதிமுகவினர் அதற்கு வாய்ப்பில்லை அதிமுக ஆட்சிதான் என்று கூறி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் இதுகுறித்து இரு கட்சியினர் இடையே வார்த்தை மோதல்கள் வெடித்துள்ள நிலையில் அதிமுக நிலைபாடு குறித்து அதிமுக அமைப்பு செயலாளர் அன்வர் ராஜா பேசியுள்ளார். அதில் அவர் “பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது என்பது இயல்பான ஒன்றுதான். வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. முதல்வர் தேர்வு குறித்த பாஜகவின் திட்டம் அதிமுகவிடம் பலிக்காது. எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர். இது உறுதி” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K