விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தொண்டர்களையும் கட்சியையும் தயார்படுத்தி வருவதுடன், வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட பல கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இன்று, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய 3 கட்சிகளுக்கும் தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்ய திமுக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.