சசிகலா கும்பல் ஜெயலலிதாவுக்கு எதிராக சதி : சசிகலா புஷ்பா அதிரடி

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2016 (15:09 IST)
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இவர்களின் கும்பலால் ஏதேனும் செய்யப்பட்டிருக்குமோ என்று சசிகலா புஷ்பா சந்தேகம் எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஏற்கனவே 2011ம் ஆண்டு 16பேரை ஜெயலலிதா கட்சியில் இருந்து வெளியேற்றினார். சசிகலா நடராஜன் உள்பட. எதற்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும்.
 
ஜெயலலிதா அதற்கு கூறிய காரணம், என் ஆட்சியை கவிழ்ப்பதற்காக எனக்கு பின்னால் இருந்து துரோகம் செய்தார்கள். சதி செய்து ஆட்சியை கலைக்கப் பார்த்தார்கள் என்று துரோக குற்றச்சாட்டு சசிகலா நடராஜன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் சுமத்தி, சிலரை சிறையில் கூட அடைத்து சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். மீண்டும் அப்படியேதேனும் சதி செய்யப்பட்டதா என்று தொண்டர்கள் மத்தியிலும், என் மத்தியிலும் எழுந்திருக்கிறது.
 
கடந்த சில தினங்களாக பார்த்தால் சசிகலா நடராஜன் ஏன் கட்சியை பிடிக்கக் கூடாது. ஏன் அவர் துணைப் பொதுச்செயலாளராக ஆக்கப்படக்கூடாது. சசிகலா நடராஜன் ஏன் தஞ்சாவூரில் சட்டமன்ற உறுப்பினராக நிறுத்தப்படக்கூடாது என அவர்களே வேறொருவர் கூறுவதைப்போல பத்திரிக்கைகள், வாட்ஸ்அப்களில் செய்திகளை பரப்பிப்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு தவறான செயல். 
 
ஏனென்றால் ஜெயலலிதா 2011ல் அவரை கட்சியில் இருந்து நீக்கிப்பின்னர் மீண்டும் அவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்து என்ன கூறி வந்தார்கள். நான் அக்காவுக்கு என்றைக்குமே உழைக்கக் கூடிய சேவகியாகத்தான் இருப்பேன். ஒரு கவுன்சிலர் பதவிக் கூட நான் வாங்க மாட்டேன். அரசியலில் எந்த ஒரு கட்சிப் பதவியும் எனக்கு வேண்டாம் என்று சொன்ன சசிகலா நடராஜன், ஏன் இன்று தஞ்சாவூரில் நிற்கலாமே என்று வேறொவரை சொல்ல வைத்து விளம்பரம் செய்கிறார்கள். அப்படியென்றால் முதலமைச்ருக்கு இவர்களின் கும்பலால் ஏதேனும் செய்யப்பட்டிருக்குமோ?” என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்