இஸ்லாமியர்களின் பாதுகாப்புக்காக செய்தோம்! கே.எஸ்.அழகிரி

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (11:49 IST)
பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கமளித்துள்ளார்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. இதுகுறித்து பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ” நவம்பர் 17 கட்சி கூட்டத்தில் திமுகவிடம் எத்தனை இடங்கள் கேட்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்” என கூறினார்.

அயோத்தி வழக்கில் காங்கிரஸ் ஆதரித்தது குறித்து கேள்வியெழுப்பியதற்கு பதில் அளித்த அவர் ”பாபர் மசூதி வழக்கில் இஸ்லாமியர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டே காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. இரத்த ஆறு ஓடுவதை காங்கிரஸ் என்றுமே விரும்பியதில்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்