அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் போராட வேண்டும் !- ப. சிதம்பரம் டுவீட்

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (16:59 IST)
இந்தி பேசாத மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டுமென்று ப. சிதம்பரம் டிவிட்டர் வாயிலாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரை வலியுறுத்தியுள்ளார்.
ஐ. என். எக்ஸ் மீடிய நிறுவனத்தில் இருந்து முறைகேடாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில்  வழக்கில், முன்னாள்  மத்திய அமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் திகார் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில்,இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

’இந்தி பேசாத மக்களுடன் இணைந்து நாம் போராடுவதற்கு தயாராக வேண்டும்.எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம். எனவே, இந்தி மொழி குறித்து அமித் ஷா கூறியதற்கு எதிராக  நாளை மறுநாள் திமுக நடத்தவுள்ள போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்க வேண்டும்’ என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியை ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

 
ப. சிதம்பரம் தில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதும், தனது சார்பில் தனது குடும்பத்தினரை டுவிட்டரில் பதிவிடும்படி ப. சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்