ராஜாராஜ சோழன் இந்து இல்லைனு சொல்றது எப்படி இருக்குன்னா..? – காங்கிரஸ் பிரமுகர் கண்டனம்!

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (08:52 IST)
ராஜராஜ சோழன் இந்து கிடையாது என வெற்றிமாறன் பேசியதற்கு முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசனாக சித்தரிக்க முயற்சிகள் நடந்து வருகிறது என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து வெற்றிமாறனின் கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ: ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை, மீறினால் 3 ஆண்டுகள் சிறை: தமிழக அரசு

இந்நிலையில் வெற்றிமாறன் மற்றும் அவருக்கு ஆதரவான கருத்துகள் முட்டாள்தனமானவை என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பிரமுகருமான கரண் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ”சிவன் இந்து மதத்தின் ஆதி கடவுள். ஸ்ரீநகர் முதல் ராமேஸ்வரம் வரை அவருக்கு கோவில்கள் உள்ளது. சிவன் கோவில்களில் அற்புதம் நிறைந்த ஒன்றான பிரகதீஸ்வரர் கோவிலை ராஜராஜசோழன் கட்டியுள்ளார்.

அப்படிப்பட்ட ராஜராஜ சோழனை இந்து அல்ல, சைவ மதத்தை சேர்ந்தவர் என சொல்வது. ப்ரிவன் கத்தோலிக்கன் ஆனால் கிறிஸ்தவன் அல்ல என்று சொல்வது போல உள்ளது” என்று கூறியுள்ளார்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்