சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் அவர் கலந்து கொண்டு தேமுதிக சார்பில் ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மின்வாரிய ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். தேர்தலுக்கு முன்பு திமுக ஒரு நிலைப்பாட்டில் உள்ளது என்றும் தேர்தலுக்குப் பின்பு ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாட்டில் உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.
இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்று ஒட்டுமொத்த கேங்மேன் தொழிலாளர்கள் சார்பாக முதல்வருக்கு இந்த கேள்வி எழுப்புகிறேன் என்று குறிப்பிட்ட பிரேமலதா, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றதால்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். இவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் ஒருபக்கம், மருத்துவர்கள் ஒருபக்கம், செவிலியர்கள் ஒரு பக்கம் என எல்லா துறையிலும் தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்று அவர் கூறினார்.