பரிதவிக்கும் சமச்சீர் கல்வி மாணவர்கள்!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (17:34 IST)

மருத்துவப் படிப்புகளில் மாணவ,மாணவிகள் சேர்வதற்கு இனி ஒரே வழி நீட் தேர்வு மட்டுமே. 


 

12-ம் வகுப்புத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. மேலும், 12-ம் வகுப்புத் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும்.  இந்த தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து தான் அதிகமாக கேள்விக்கேட்கப்படுகிறது. அதனால், சமச்சீர் கல்வி படித்த பல மாணவர்கள் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் 12-ம் வகுப்புத் தேர்வில் 1117 மதிப்பெண்கள் எடுத்தவர். இவரும் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளார். அதனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சுரேஷ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது குறித்து பதில் தருமாறு மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மாணவர்களின் மருத்துவ கனவிற்கு வழிவகுக்க, ஒன்று சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் அல்லது, நீட் தேர்வு நீக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 
அடுத்த கட்டுரையில்